புகார் பெட்டி

புகார் பெட்டி;

Update:2021-12-30 20:23 IST

புதர்மண்டி கிடக்கும் பூங்கா

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பூங்கா புதர் மண்டி கிடப்பதால் சுற்றுலா பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர். மேலும் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்களும் சேதமடைந்து கிடக்கிறது. கழிப்பிடம் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் பூங்காவை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சக்தி, பொள்ளாச்சி.

வேகத்தடை அமைக்கப்படுமா?

பொள்ளாச்சி உடுமலை ரோடு அகலப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையில் வேகத்தடை இல்லாததால் அரசு ஆஸ்பத்திரி முன்பு வாகனங்கள் வேகமாக செல்கிறது. இதனால் நோயாளிகள், பொதுமக்கள் சாலையை கடந்து செல்ல சிரமப்படுகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே அரசு ஆஸ்பத்திரி முன்பு வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜா, ஆனைமலை.

சுகாதார சீர்கேடு

கோவை நஞ்சுண்டபுரத்தில் இருந்து போத்தனூர் செல்லும் சாலையோரத்தில் உள்ள சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படவில்லை. அதன் ஓரத்திலும் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடுகிறது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

ஜீவா அர்ச்சனா, சுந்தராபுரம்.

மயானம் பராமரிக்கப்படுமா?

சின்னவேடம்பட்டி நேதாஜி நகர் அருகே மயானம் உள்ளது. இந்த மயானம் புதர் மண்டி காணப்படுகிறது. மேலும் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளின் புகலிடமாக திகழ்கிறது. இது தவிர தெருவிளக்கு உள்பட போதிய அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய வந்து செல்பவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மயானத்தை முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ராஜா, சின்னவேடம்பட்டி.

தெருநாய்கள் தொல்லை

கோவை கணபதி மணியகாரம்பாளையத்தில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் குழந்தைகளை வெளியே விளையாட அனுப்பவே அச்சமாக உள்ளது. மேலும் இரவில் சாலையில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் துரத்தி கடிக்க முயல்கின்றன. இதனால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அங்கு தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.

கவிதா, கணபதி. 

கடும் துர்நாற்றம்

கோவை கூடலூர் கவுண்டம்பாளையம் கே.எஸ்.பி. பாலம் அருகே இறந்த மாட்டின் உடலை சிலர் வீசி சென்று உள்ளனர். இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட:டு உள்ளது. எனவே உடலை வீசி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு அதை அங்கிருந்து அப்புறப்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சண்முகம், நரசிம்மநாயக்கன் பாளையம்.

பயன்படாத கழிப்பிடம்

தொண்டாமுத்தூர் அருகே வெள்ளிமலைப்பட்டிணத்தில் பொதுமக்களின் வசதிக்காக பொது கழிப்பிடம் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த கழிப்பிடம் பயன்படுத்தப்படாமல் கிடக்கிறது. மேலும் கழிப்பிடத்தை சுற்றி முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. இதனால் பொதுமக்கள் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கும் அவல நிலை உள்ளது. எனவே அந்த கழிப்பிடத்தை முறையாக பராமரித்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் முன்வர வேண்டும்.

சுப்ரமணியம், தொண்டாமுத்தூர்.

நடைபாதை அடைப்பு

கோவை 95-வது வார்டுக்கு உட்பட்ட பாரதி நகர் மற்றும் உமர் நகர் சந்திக்கும் இடத்தில் நடைபாதையில் புதிதாக தடுப்பு வைத்து அடைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

அப்துல் ஹக்கீம், போத்தனூர்.

மேலும் செய்திகள்