கருமத்தம்பட்டி
கோவை சூலூர் விமானப்படை தளம், பேஸ் ரிப்பேர் டெப்போ என்ற பெயரில் இயங்கி வருகிறது. இங்கு இதுவரை 100 டார்னியர் ரக விமானங்கள் பழுது நீக்கப்பட்டு மீண்டும் விமானப்படையில் சேர்க்கப்பட்டு உள்ளது. இது மட்டுமின்றி ஹெலிகாப்டர் படையின் 109-வது பிரிவு, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் ஆகிய விமானங்கள் அடங்கிய படைப்பிரிவும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
இதன் தலைமை அதிகாரியாக வாயு சேனா பதக்கம் பெற்ற ஏர் கமாண்டர் பி.கே.ஸ்ரீகுமார் தலைமை வகித்து வந்தார். இந்நிலையில் புதிய தலைமை அதிகாரியாக வாயு சேனா பதக்கம் பெற்ற ஏர் கமாண்டர் கே.ஏ.ஏ.சஞ்சீப் நியமிக்கப்பட்டார். அவர், பதவி ஏற்றுக்கொண்டார். முன்னதாக விமானப்படை அதிகாரிகளின் அணிவகுப்பை பார்வையிட்டார்.