வாங்கிய உணவுக்கு பணம் கேட்டதால் ஓட்டல் உரிமையாளர் உள்பட 3 பேர் மீது தாக்குதல்

வாலாஜாபாத் அருகே வாங்கிய உணவுக்கு பணம் கேட்டதால் ஓட்டல் உரிமையாளர் மீது சரமாரி தாக்குதல் நடத்திய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2022-01-02 17:34 IST
தாக்குதல்

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் சின்னையன் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ரஜினி (வயது 44). இவரது மனைவி சுரேகா (38). இவர்கள் சின்னையன் சத்திரம் கூட்டு சாலையில் ஓட்டல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஓட்டலுக்கு வந்த ஆட்டுப்புத்தூர் பகுதியை சேர்ந்த வீரா என்பவர் உணவு வாங்கி உள்ளார். வாங்கிய உணவுக்கு ஓட்டல் உரிமையாளர் ரஜினி பணம் கேட்டுள்ளார்.

அப்போது பணத்தை தர முடியாது எனக்கூறிய வீரா தனது நண்பர்களை அழைத்துக் கொண்டு வந்து ஓட்டல் உரிமையாளர் ரஜினி, அவரது மனைவி சுரேகா மற்றும் உறவினர் நாகராஜ் ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

7 பேர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்த ரஜினி, சுரேகா, நாகராஜ், ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அடிதடியில் ஈடுபட்ட வீரா மற்றும் அவரது நண்பர்களான ஆட்டுப்புத்தூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (25), அருண் (28), டில்லி பாபு (32), மாணிக்க செல்வம் (26), மைக்கேல்ராஜ் (34), மோகன் (45), உள்பட 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்