பொள்ளாச்சி சுல்தான்பேட்டையில் அனுமன் ஜெயந்தி விழா

பொள்ளாச்சி சுல்தான்பேட்டையில் அனுமன் ஜெயந்தி விழா;

Update:2022-01-02 19:27 IST
பொள்ளாச்சி

பொள்ளாச்சி சுல்தான்பேட்டையில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

அனுமன் ஜெயந்தி

பொள்ளாச்சி அருகே உள்ள பாலாற்றங்கரையில் மிகவும் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரிலிருந்து மிக அதிக அளவில் சனிக்கிழமை, மார்கழி மாதம் மற்றும் அமாவாசை, சிறப்பு தினங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில், கோவிலில் நேற்று அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக நடந்தது. விழாவில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 
பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிமலை அடுத்துள்ள சின்னமலை ஸ்ரீ பூமி நீளா நாயகி சமேத ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவிலில் நேற்று காலை 4 மணிக்கு அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பின், ஆஞ்சநேயருக்கு 108 சங்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் முககவசம், சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 

வெண்ணெய் காப்பு அலங்காரம்

பொள்ளாச்சி அடுத்த டி.கோட்டாம்பட்டி ஸ்ரீ கோதண்டராமர் கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி ராமபிரானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதையடுத்து ஸ்ரீ ஜெயவீர, ராமபக்த ஆஞ்சநேயர் வெண்ணெய் காப்பு ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 
சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரி புத்தூர் ஸ்ரீ பூமி நீளா சமேத காரண வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று காலை 9 மணி முதல் 16 வகையான அபிஷேகங்கள் அலங்காரங்கள் விசேஷ தீபாராதனை ஆஞ்சநேயருக்கு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்தம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்