தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்;

Update:2022-01-02 21:10 IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 99626 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதர்மண்டி கிடக்கும் கிணறு 

கோத்தகிரி அருகே உள்ள செல்வபுரம் பகுதியில் உள்ள குடிநீர் கிணறு மற்றும் குடியிருப்புப் பகுதிகள் முழுவதும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளது. இதனால் அங்கு வனவிலங்குகள் மற்றும் விஷசந்துக்களின் குடியிருப்பு பகுதியாக மாறிவிட்டது. அவை அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள்ளும் புகுந்துவிடுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார் கள். எனவே அதிகாரிகள் கிணற்றை சுற்றிலும் வளர்ந்துள்ள புதர்களை அகற்ற வேண்டும்.
ரங்கன், கிருஷ்ணாபுதூர்.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

  கோவை உக்கடம் போலீஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு முன்பு குப்பைகள் அள்ளப்படவில்லை. இதனால் அங்கு குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. காற்று வீசும்போது அந்த குப்பைகள் பறக்கிறது. அத்துடன் நாய்கள் குப்பைகளை சாலைக்கு கொண்டு வந்து போடுவதால் அந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.
  அபுபக்கர், உக்கடம்.

போக்குவரத்துக்கு இடையூறு

  கோவையை அடுத்த கோவைப்பிரிவு பஸ்நிறுத்தம் அருகே நடைபாதை உள்ளது. இங்கு டெம்போக்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். பஸ்நிறுத்தம் அருகே அதிகளவில் டெம்போக்கள் நிறுத்துவதால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதை தடுக்க வேண்டும்.
  சுதீா், கோவைப்புதூர்.

ரேஷன் கடைகளில் கிருமிநாசினி

  ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க கைரேகை பதிவு செய்யப் படுகிறது. ஆனால் பெரும்பாலானவர்களின் கைரேகை அதில் பதிவாகாத தால் பொதுமக்கள் பொருட்கள் வாங்க முடியாமல் அவதியடைந்து வருகிறார்கள். ஆனால் கிருமி நாசினி மூலம் கையை சுத்தம் செய்துவிட்டு அதற்கான எந்தரத்தில் கைரேகையை வைக்கும்போது சரியாக பதிவாகுகிறது. எனவே ரேஷன் கடைகளில் கிருமி நாசினி வைத்தால் உதவியாக இருக்கும். அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  பழனிசாமி, கோவை.

தெருநாய்கள் தொல்லை

  கோவை மாநகராட்சி 5-வது வார்டு வி.கே.வி.நஞ்சப்பா நகர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது. நடுவழியில் கூட்டங்கூட்டமாக படுத்து கிடக்கும் தெருநாய்கள், அந்த வழியே செல்பவர்களை துரத்தி கடிக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அதுபோன்று கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  ஜெயபிரகாஷ், சரவணம்பட்டி.

வாகனங்களால் நெரிசல்

  கோவை கணபதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்குள்ள சுற்றுச்சுவரை ஒட்டி சாலையின் ஓரத்தில் ஏராளமான கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே விபத்துகள் நடப்பதற்கு முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்களை அகற்ற வேண்டும்.
  ராஜசேகர், கணபதி.

ஒளிராத மின்விளக்கு

  கோவை மாநகராட்சி 99-வது வார்டு கோணவாய்க்கால்பாளையம் காளியம்மன் கோவில் தெருவில் மின்விளக்கு உள்ளது. அது பல நாட்களாக ஒளிரவில்லை. மேலும் தெருவில் பல இடங்களில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்டதால் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இரவில் இருள் சூழ்ந்து இருப்பதால் குழிகள் இருப்பது தெரியாமல் பலர் கீழே விழுந்து காயத்துடன் செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே தெருவிளக்கை ஒளிர செய்ய வேண்டும்.
  சுவாமிநாதன், கோணவாய்க்கால்பாளையம்.

உடைந்த கான்கிரீட் தளம்

  கோவை சவுரிபாளையம் பஸ்நிறுத்தம் அருகே சாக்கடை கால்வாய் உள்ளது. இதன் மீது கான்கிரீட் தளம் போடப்பட்டு உள்ளது. அந்த தளம் உடைந்து காணப்படுவதால், அங்கு பஸ்சுக்காக காத்திருப்பவர்கள் தவறி சாக்கடை கால்வாய்க்குள் விழும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து ஆபத்தான நிலையில் இருக்கும் இந்த கான்கிரீட் தளத்தை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
  தரணி, சவுரிபாளையம்.

குண்டும் குழியுமான சாலை

  கோவை அருகே உள்ள ஒத்தக்கால்மண்டபத்தில் இருந்து வேலந்தா வளத்துக்கு சாலை செல்கிறது. இந்த சாலையில் வழுக்குப்பாறை என்ற இடத்தில் உள்ள பாலம் அருகே குண்டும் குழியுமாக மிக மோசமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து விபத்து ஏற்படுவதற்கு முன்பு இந்த சாலையை சரிசெய்ய வேண்டும்.
  சிவராமன், பச்சாபாளையம். 

குப்பைகள் அகற்றப்படுமா?

  கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள பாரதியார் வீதியில் பல நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மேலும் காற்று வீசும்போது அவை பறப்பதால் பொதுமக்கள் அவதிய டைந்து வருகிறார்கள். எனவே அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.
  செல்வன், பாப்பநாயக்கன்பாளையம்

மேலும் செய்திகள்