கோவையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கோவையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்;
கோவை
பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி எஸ்.டி.பி.ஐ. சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி கோவை உக்கடம் போலீஸ் நிலையம் அருகே ஏராளமான எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நேற்று மாலை திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் ராஜா உசேன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் முகமது முபாரக் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு 700 கைதிகள் விடுதலை தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. ஆனால் இஸ்லாமிய சிறைவாசிகள், 7 தமிழர்கள் விடுதலை கோரிக்கையை முன்வைத்தவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்து உள்ளது. எனவே அந்த அரசாணையை ரத்து செய்து விட்டு அனைவரையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இதில் பாலாஜி எம்.எல்.ஏ., மே இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் அபுதாகீர், முஸ்தபா, அப்துல் ஹக்கீம், பசீர் அகமது, ஹாரிஸ் பாபு, முகமது நவ்பல், பீர் முகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.