துணிக்கடை ஊழியர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
துணிக்கடை ஊழியர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்;
கோவை
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், முகக்கவசம் அணிவது உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி கோவையில் சுகாதாரத்துறையினர் கொரோனா விதிமீறல் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். ஒப்பணக்கார வீதியில் உள்ள ஒரு துணிக்கடையில் முகக்கவசம் அணியாமல் ஊழியர்கள் பணிபுரிந்தனர்.
இதையடுத்து அங்கு முகக்கவசம் இன்றி பணிபுரிந்த 25 ஊழியர்களுக்கு தலா ரூ.200 வீதம் மொத்தம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறும்போது, 3-வது அலை தொடங்கி உள்ள நிலையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும் கடைகள், வர்த்தக நிறுவனங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.