தொழிலாளி உருட்டுக்கட்டையால் அடித்து கொலை

பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் தொழிலாளி உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவருடைய நண்பர் சிகிச்சை பெற்று வருகிறார்.;

Update:2022-01-03 21:53 IST
கோவை

பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் தொழிலாளி உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவருடைய நண்பர் சிகிச்சை பெற்று வருகிறார்.

சுமைதூக்கும் தொழிலாளர்கள்

கோவை கரும்புக்கடை சாரமேட்டை சேர்ந்தவர் யூசுப் (வயது54). இவர் டி.கே.மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இங்கு கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்த நாசர் (42) என்பவரும் வேலை பார்த்து வருகிறார். ஒரே இடத்தில் வேலை பார்த்ததால் அவர்கள் இடையே பழக்கம் ஏற்பட்டு நண்பர்கள் ஆகினர். இந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு யூசுப், நாசரிடம் பணம் வாங்கியதாக தெரிகிறது.

அடித்து கொலை

இந்த நிலையில், அவர்கள் 2 பேரும் டி.கே. மார்க்கெட் பகுதியில் அமர்ந்து மது குடித்தனர். அப்போது யூசுப்பிடம், தன்னிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு நாசர் கேட்டுள்ளார். இது தொடர் பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. 

அவர்கள் ஒருவரை ஒருவர் மாறி, மாறி உருட்டுக்கட்டையால் தாக்கிக் கொண்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி யூசுப் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த நாசர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

விசாரணை

இது குறித்த புகாரின்பேரில் பெரியகடைவீதி போலீசார் நாசர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிகிச்சை முடிந்த பிறகு நாசரை கைது செய்து சிறையில் அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்