தினமும் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை
தினமும் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை;
கோவை
3-வது அலையை எதிர்கொள்ள தினமும் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாக கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா கூறினார்.
கொரோனா பரவல்
கொரோனா 3-வது அலையை தடுக்க கட்டுப்பாடுகள் அதிகரிக்கப் பட்டு உள்ளது.
இந்த நிலையில் கோவை மாநகராட்சியில் வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனையில் ஈடுபடும் முன்கள பணியாளர்க ளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று வ.உ.சி. மைதானத்தில் நடந்தது.
இதில் 500 முன்கள பணியாளர்களுக்கு உடல் வெப்பநிலை கண்டறியும் கருவி, பல்ஸ் ஆக்சி மீட்டர் ஆகியவற்றை கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா வழங்கினார்.
இதைத் தொடர்ந்து அவர், நிருபர்களிடம் கூறியதாவது
கட்டுப்பாட்டு அறை
முன்கள பணியாளர்கள் வீடு வீடாக சென்று காய்ச்சல், உடல் வெப்பம், ஆக்சிஜன் அளவு ஆகியவற்றை சோதனை செய்வார்கள்.
3-வது அலையை எதிர்கொள்ள ஆர்.எஸ்.புரம் கலை அரங்கத்தில் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தபட்டு உள்ளது.
அங்கு, தொற்று ஏற்பட்டவர்களை அழைத்து செல்ல வாகன வசதி செய்யப்பட்டு உள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டவர்களின் நிலையை போன் மூலம் அறிய தனி குழு அமைக்கப்பட்டு உள்ளது.
கொரோனா தொடர்பான தகவல்களை 0422 -4585800 என்ற உதவி எண்ணில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
சிகிச்சை மையம்
மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து கொடிசியா 'டி' அரங்கத்தில் 350 ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
'இ' அரங்கத்தில் 300 படுக்கை வசதி இன்று (நேற்று) தயாராகும். சீனிவாச புரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் ஏற்கனவே 50 படுக்கைகளு டன் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது.
கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அதிகபட்சமாக நாளொன்றுக்கு 4 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியானால்கூட சிகிச்சை அளிக்கும் வகையில் முன்எச்சரிக் கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதற்காக 15 டாக்டர்கள், 75 செவிலியர்கள், 61 லேப்டெக்னீசியன் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
பரிசோதனை
கோவையில் நாளொன்றுக்கு 1300 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் இன்று (நேற்று) முதல் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்காக கூடுதலாக 25 சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப் பட உள்ளனர். தேவையான உபகரணங்களுக்கு முன்பதிவு செய்யப் பட்டு உள்ளது.
எனவே பொதுமக்கள் பதற்றம் அடையாமல் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.