பெண் போலீசை தாக்கி கொலை மிரட்டல்

பெண் போலீசை தாக்கி கொலை மிரட்டல்;

Update:2022-01-09 22:02 IST
கோவை

கோவை பாலசுந்தரம் ரோடு போலீஸ் பயிற்சி பள்ளி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரியா(வயது 24). ஆயுதப்படை போலீசில் பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் ரவிச்சந்திரன். ஆட்டோ டிரைவர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. மேலும் வீட்டுக்கு அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து, தனது மனைவியிடம் தகராறு செய்து வந்தார். 

இந்த நிலையில் சம்பவத்தன்று ரவிச்சந்திரன் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த பிரியாவிடம் மேலும் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்தார். அப்போது அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறினார். இதை கேட்டதும் ஆத்திரம் அடைந்த ரவிச்சந்திரன் தனது மனைவி என்றும் பாராமல் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்றார். இதுகுறித்து பிரியா கொடுத்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிச்சந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்