பல்லாவரம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் உள்பட 12 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிக கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் உள்பட 10 போலீசாருக்கும் 2 காவல் நிலைய கம்ப்யூட்டர் பிரிவு ஊழியர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.;
இதில் 2 போலீசார் கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டியூட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற 10 பேரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒரே போலீஸ் நிலையத்தில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் போலீஸ் நிலையத்துக்குள் பொதுமக்கள் யாரையும் அனுமதிப்பதில்லை. புகார்களை வெளியிலிருந்தே போலீசார் வாங்கிக் கொள்கின்றனர். போலீஸ் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் போரூரில் இருந்து பூந்தமல்லி வரை இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 26 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. ஆவடி மாநகராட்சியில் பணியாற்றக்கூடிய டாக்டர், பொறியாளர், உதவி பொறியாளர் உள்ளிட்ட 9 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.