பூந்தமல்லியில் பஸ்சின் மேற்கூரை மீது அமர்ந்து ரகளை செய்த பள்ளி மாணவர்கள்

வெள்ளவேடு செல்லும் அரசு பஸ்சில் பூந்தமல்லியில் உள்ள அரசு அறிஞர் அண்ணா பள்ளியில் பயிலும் மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டோர் பஸ்சின் மேற்கூரையில் மீது அமர்ந்து கோஷம் போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-01-13 07:02 GMT
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு காரணமாக 10 முதல் பிளஸ்-2 வரை மட்டுமே பள்ளியில் வகுப்புகள் நடைபெறுகின்றன. தற்போது கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அரசு பஸ்களில் 75 சதவீதம் பயணிகள் பயணம் செய்ய தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இந்த நிலையில், நேற்றைய தினம் சைதாப்பேட்டையில் இருந்து வெள்ளவேடு செல்லும் அரசு பஸ்சில் பூந்தமல்லியில் உள்ள அரசு அறிஞர் அண்ணா பள்ளியில் பயிலும் மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அப்போது அவர்கள் கல்லறை நிறுத்தம் அருகே வந்தபோது, திடீரென பஸ்சின் மேற்கூரை மீது ஏறி அமர்ந்து கொண்டு கோஷமிட்டனர். இதனை அங்கிருந்த பொதுமக்கள் தங்களது செல்போனில் படம் பிடித்த நிலையில், காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அரசு பஸ்களில் படியில் தொங்கியபடி பயணம் செய்யக்கூடாது என தமிழக அரசு அறிவுறுத்திய நிலையில் அரசு பள்ளி மாணவர்கள் பஸ்சின் மேற்கூரையில் மீது அமர்ந்து கோஷம் போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்