செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நரசிம்ம பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பத்தர்களுக்கு காட்சியளித்தார்.

Update: 2022-01-14 13:56 GMT
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் பழமைவாய்ந்த பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. புகழ்பெற்ற இந்த கோவிலில் வைகுண்டஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி மிகவும் விஷேசம். ஆண்டுதோறும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வார்கள் மேலும் அன்றைய தினம் முழுவதும் அன்னதானங்கள் நடைபெறும். இந்த நிலையில் நேற்று இந்த கோவிலில் காலை 6 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது மிக்குறைந்த அளவிலேயே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அப்போது நரசிம்ம பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பத்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்களின் வசதிக்காக நீண்டதூரம் தடுப்பு கட்டைகள் அமைந்திருந்தனர். ஆனால் கொரோனா தொற்றால் பக்தர்கள் கூட்டம் மிக குறைவாக காணப்பட்டது.

இதுபோல செங்கல்பட்டு வேதாந்த தேசிகர் சீனிவாசபெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் அதிகாலை 4.30 மணிக்கும், கோதண்டராமர் பெருமாள் கோவிலில் காலை 6.20 மணிக்கும் திறக்கப்பட்டது. அங்கும் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டன.

மேலும் செய்திகள்