சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது
சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது;
நெகமம்
நெகமம் அருகே உள்ள ஆண்டிபாளையம் பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக நெகமம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகமது நேற்று மாலை அங்கு சோதனை நடத்தினர். அப்போது சேவல் வைத்து சூதாடியதாக அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 32), வசந்த் பிரசாத் (23), மணிகண்டன் (31), மாரிமுத்து ( 65) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 2 சேவல்களும், ரூ.3,500 பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல வெள்ளருக்கம் பாளையம் பகுதியில் சேவல் வைத்து சூதாடியதாக அதே பகுதியை சேர்ந்த ராஜா (23), சந்திரசேகர் (35), மனோஜ்குமார் (43), ராஜேஷ்குமார் (29) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நேற்று மட்டும் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.