கோவை
கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 1,732 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்த நிலையில் சுகாதார துறையினர் வெளியிட்ட பட்டியலின்படி கோவையில் நேற்று 1,866 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து இதுவரை 2 லட்சத்து 64 ஆயிரத்து 759 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 54 வயது ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாவட்டத்தில் இதுவரை 2,530 பேர் கொரோனா தொற்றுக்கு இறந்து உள்ளனர்.கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 602 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இவர்களுடன் சேர்த்து இதுவரை 2 லட்சத்து 53 ஆயிரத்து 477 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 8 ஆயிரத்து 752 பேர் சிகிச்சையில் உள்ளனர்.