மதுபோதையில் மனைவியை உல்லாசத்துக்கு கேட்டதால் கொன்றேன்
அன்னூர் அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில், மதுபோதையில் மனைவியை உல்லாசத்துக்கு கேட்டதால் கொன்றதாக கைதான நண்பர் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.;
அன்னூர்
அன்னூர் அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில், மதுபோதையில் மனைவியை உல்லாசத்துக்கு கேட்டதால் கொன்றதாக கைதான நண்பர் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார்.
தொழிலாளி கொலை
கோவை மாவட்டம் அன்னூர் அருகே நாதேகவுண்டன்புதூரை சேர்ந்தவர் நடராஜன்(வயது 56). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலையில் அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் உடலில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். அவரது அருகில் ரத்த கறையுடன் கல் கிடந்தது.
இதனால் அவர், தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அவரது நண்பரான குமாரசாமி என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், நடராஜை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
மது குடித்தனர்
மேலும் அவர் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-
பக்கத்து வீட்டுக்காரர்களான நானும், நடராஜூம் நண்பர்களாக பழகி வந்தோம். பொங்கல் பண்டிகை நாளில் ஒன்றாக மது குடிக்க முடிவு செய்தோம்.
அதன்படி எங்களது சில நண்பர்களுடன், சம்பவம் நடந்த தோட்டத்தில் அமர்ந்து மது குடித்தோம். பின்னர் மற்ற நண்பர்கள் தங்களது வீடுகளுக்கு சென்ற நிலையில், நாங்கள் 2 பேர் மட்டும் அங்கு அமர்ந்து தொடர்ந்து மது குடித்தோம்.
கைது
போதை தலைக்கேறியதும் எனது மனைவி குறித்து நடராஜ் அவதூறாக பேசியதோடு உல்லாசத்துக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் நான் ஆத்திரம் அடைந்து, நடராஜின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தேன். இவ்வாறு வாக்குமூலத்தில் அவர் கூறி உள்ளார். இதையடுத்து குமாரசாமியை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.