கோவை மாநகரம் வெறிச்சோடியது

2-வது வாரமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால், கடைகள் அடைக்கப்பட்டதோடு பஸ்களும் ஓடவில்லை. இதனால் கோவை மாநகரம் வெறிச்சோடியது.;

Update:2022-01-16 22:15 IST
கோவை

2-வது வாரமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால், கடைகள் அடைக்கப்பட்டதோடு பஸ்களும் ஓடவில்லை. இதனால் கோவை மாநகரம் வெறிச்சோடியது. 

முழு ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமானதை தொடர்ந்து இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி கோவையில் 2-வது வாரமாக நேற்று முழு ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்பட்டது. 

இதையொட்டி கோவை மாநகரில் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, அவினாசி சாலை, பொள்ளாச்சி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோன்று முக்கிய கடைவீதிகளான உக்கடம், ரங்கே கவுண்டர் வீதி, டவுன்ஹால், காந்திபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் மக்கள் நடமாட்டம் இ்ல்லை.

பூங்காக்களில் அனுமதி இ்ல்லை

முழு ஊரடங்கையொட்டி கோவை மாநகரில் 700 போலீசார் மற்றும் மத்திய அதிரடிப்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேவையில்லாத காரணங்களுக்காக வெளியே சுற்றியவர்கள் மீது  வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்காக காந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தடுப்பு வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கோவையில் உள்ள அனைத்து பூங்கா மற்றும் நடைபாதைகளில் பொதுமக்கள் நடைபயிற்சி செய்ய வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கி இருந்தது. இதனால் ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபயிற்சிக்கு வந்தவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் பூங்காக்களுக்கு வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

வாடகை வாகனங்கள்

இதற்கிடையில் சாலையோரங்களில் ஆதரவற்றவர்கள் ஏராளமானவர்கள் படுத்து கிடந்தனர். அவர்களுக்கு, தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டனர். அரசு பஸ் உள்பட பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தாலும், ரெயில்கள் வழக்கம்போல் ஓடின. இதனால் கோவை ரெயில் நிலையத்துக்கு பயணிகள் வருகை இருந்தது. அவர்கள் ஆட்டோக்கள் உள்பட வாடகை வாகனங்களில் வந்து சென்றதை காண முடிந்தது. எனினும் கோவையில் முழு ஊரடங்கால் பெரும்பாலானவர்கள் வீடுகளிலேயே முடங்கினர்.

மேலும் செய்திகள்