குப்பை கிடங்கில் திடீர் தீ

குப்பை கிடங்கில் திடீர் தீ;

Update:2022-01-16 22:16 IST
கோவை

கோவை சித்தாபுதூர் மின்மயானம் அருகே 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு சாலையோரத்தில் குப்பைகள் மலைபோல குவிந்து கிடந்தது. இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் அந்த குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ஆரம்பத்தில் லேசாக பரவிய தீ, அதன்பிறகு மள மளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. 

இதனால் அந்த பகுதி புகைமூட்டமாக மாறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் வேலுச்சாமி தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 30 நிமிட போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்