தமிழக-கேரள எல்லையில் கண்காணிப்பு பணி தீவிரம்

முழு ஊரடங்கையொட்டி தமிழக-கேரள எல்லையில் கண்காணிப்பு பணி தீவிரமாக நடந்தது. அங்கு ‘நெகட்டிவ்’ சான்றிதழ் இல்லாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.;

Update:2022-01-16 22:40 IST
கோவை

முழு ஊரடங்கையொட்டி தமிழக-கேரள எல்லையில் கண்காணிப்பு பணி தீவிரமாக நடந்தது. அங்கு ‘நெகட்டிவ்’ சான்றிதழ் இல்லாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

‘நெகட்டிவ்’ சான்றிதழ்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கோவை மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி தமிழக-கேரள எல்லை பகுதியான வாளையார் பகுதியில் கேரளாவில் இருந்து நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் கண்டிப்பாக 2 தவணை தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். சான்றிதழ் இல்லாத பட்சத்தில் அந்த வாகனங்கள் கேரளாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது.

கண்காணிப்பு தீவிரம்

இந்த நிலையில் நேற்று முழு ஊரடங்கையொட்டி தமிழக-கேரள எல்லை பகுதிகளான வாளையார், வேலந்தாவளம், முள்ளி, மேல்பாவியூா், வீரப்பகவுண்டனூா், கோபாலபுரம், மீனாட்சிபுரம், ஆனைக்கட்டி, வழுக்குப்பாறை, நடுப்புணி உள்ளிட்ட 11 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

இதற்கிடையில் கோவையில் பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும், முக கவசம் அணியாதவர்கள் அபராத தொகை செலுத்த நேரிடும். சளி, காய்ச்சல் இருந்தால் உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் செய்திகள்