மாணவியை பலாத்காரம் செய்த டிரைவர் போக்சோவில் கைது

மாணவியை பலாத்காரம் செய்த டிரைவர் போக்சோவில் கைது;

Update:2022-01-17 18:43 IST

துடியலூர்

கோவையை அடுத்த கணுவாய் அருகே உள்ள காளப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் சுதாகரன் (வயது 21). இவர் சோமயம்பாளை யம் ஊராட்சியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். 

இவர் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய அலுவலகத்திற்கு பொருட்களை ஏற்றிச் செல்வது வழக்கம். 

அப்போது அவருக்கு, அந்த பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. 

நாளடைவில் அது காதலாக மாறியது. அவர்கள், கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.  

சம்பவத்தன்று மாணவியின் வீட்டில் யாரும் இல்லை என்பதை தெரிந்து கொண்டு சுதாகரன் அங்கு சென்றார்.

அவர், திருமணம் செய்வது கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

 இந்த நிலையில் வீட்டில் இருந்து மாணவி திடீரென்று மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அந்த மாணவியை தேடி வந்தனர். 

அப்போது அவர்களது செல்போனுக்கு தொடர்பு கொண்ட சுதாகரன் உங்களது மகள் என்னுடன் தான் உள்ளார். எனவே அவரை தேட வேண்டாம் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

இது குறித்து மாணவியின் பெற்றோர் துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். 

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை மீட்டனர். திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த சுதாகரன் மீது  போக்கோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். 

பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்