நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங் களில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்
அதிக இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்;
கோவை
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங் களில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
பொங்கல் விழா
கோவை செல்வபுரம் எல்.ஐ.சி. காலனியில் பா.ஜனதா கட்சி சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் பெண்கள் கலந்து கொண்டு 108 பானைகளில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரி அடித்தார். முன்னதாக அவர், பொங்கல் வைத்தார்.
அதைத்தொடர்ந்து அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது
குடியரசு தின விழாவில் பங்கேற்கும் ஊர்திகள் தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சகம் ஒரு குழு அமைத்து ஆலோசனை வழங்கும்.
அதன் அடிப்படையில் 5 முதல் 6 சுற்று பேச்சுவார்த்தை நடக்கும்.
தமிழக அரசு இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலை யில், ஊர்திக்கான அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் பெற்று பதில் அளிக்கப்படும்.
மீண்டும் ஆட்சியை பிடிக்கும்
ஆதி சங்கரர் படம் இடம் பெறக்கூடாது என கேரள மாநில அரசு கூறியதால் அந்த மாநிலத்தின் ஊர்தி இடம் பெற வில்லை. பணமதிப் பிழப்பு தொடர்பாக தனியார் தொலைக்காட்சியில் வெளியான நகைச்சுவை நிகழ்ச்சி கருத்து சுதந்திரம் அல்ல.
குழந்தைகளை பாது காக்கும் என்.சி.பி.சி.ஆர். அமைப்பின் விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே அதை சட்ட ரீதியாக அணுக உள்ளோம்.
உத்தரபிரதேசத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கு சீட் வழங்க முடியாது.
சாதி அரசியல் செய்யக்கூடாது என்ற நிலைப்பாடுகளால் பலர் பா.ஜனதாவில் இருந்து விலகி உள்ளனர்.
உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும்.
விஞ்ஞானப்பூர்வ விளக்கம்
கோவையில் 30 சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு மாநகராட்சி கட்டணம் வசூலித்தால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் இருந்த வெல்லம் உருகுவது குறித்து விஞ்ஞான ஊழலுக்கு விஞ்ஞானப்பூர்வமாக விளக்கம் அளிக்கிறார்கள்.
தேர்தலின் போது தி.மு.க. அளித்த 500 வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவில்லை என்பதற்கு சான்றாக பொங்கல் பரிசு மற்றும் நகைக்கடன் உள்ளது.
அதிக இடங்களில் வெற்றி
பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணி சிறப்பாக உள்ளது. நகர்புற உள்ளாட்சி தேர்தலில்அதிக இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியில் தான் குழப்பம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.