கள்ளக்காதலில் ஈடுபட்ட வாலிபரை ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்
வாலிபரை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்;
கோவை
நண்பர் மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட வாலிபரை ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக அந்த பெண்ணின் கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நண்பர் மனைவியுடன் உல்லாசம்
கோவை சாய்பாபாகாலனி அருகே உள்ள கே.கே.புதூரை சேர்ந்த 29 வயது வாலிபர், சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது
நான் காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஒரு பார்சல் நிறுவனத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறேன்.
எனது நெருங்கிய நண்பனின் மனைவியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அது கள்ளக்காதலாக மாறியது.
இதனால் நண்பர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது மனைவியுடன் உல்லாசமாக இருந்தேன்.
ஆபாச வீடியோ
இதை அறிந்த எனது நண்பர் எங்கள் இருவரையும் கண்டித்தார். ஆனாலும் எங்களது கள்ளக்காதல் தொடர்ந்தது. சம்பவத்தன்று நான் எனது வீட்டில் தனியாக இருந்தேன்.
அப்போது எனது நண்பர், அவருடைய நண்பர்களுடன் வந்து என்னை தாக்கி மிரட்டல் விடுத்தனர்.
மேலும் என்னை ஆபாசமாக வீடியோ எடுத்து விட்டு சென்றனர். இதையடுத்து எனது நண்பர், என்னை தொடர்பு கொண்டு ரூ.2 லட்சம் பணம் தர வேண்டும். இல்லை என்றால் உனது ஆபாச வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று தொடர்ந்து மிரட்டி வருகிறார்.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
6 பேர் மீது வழக்கு
அந்த புகாரின் பேரில் அந்த வாலிபரின் கள்ளக்காதலியின் கணவர் உள்பட 6 பேர் மீது சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.