கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபரை ஆபாச வீடியோ எடுத்து பணம் பறிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்

வாலிபரை ஆபாச வீடியோ எடுத்து பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது;

Update:2022-01-18 20:13 IST

கோவை

கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபரை ஆபாச வீடியோ எடுத்து பணம் பறிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது

கள்ளக்காதல்

கோவை சாய்பாபா காலனி அருகே கே.கே.புதூரை சேர்ந்த 29 வயது வாலிபர் தனியார் பார்சல் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். 

இவர் தனது நெருங்கிய நண்பனின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது அவருக்கு நண்பனின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இதையடுத்து நண்பன் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது மனைவியுடன் வாலிபர் அடிக்கடி உல்லாசமாக இருந்தார். 

இதை அறிந்த அந்த பெண்ணின் கணவர் தனது மனைவி மற்றும் நண்பரை கண்டித்துள்ளார். ஆனால் அவர்கள் தொடர்ந்து கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்தனர்.

2 பேர் கைது

இந்த நிலையில் அந்த பெண்ணின் கணவர், தனது நண்பர்களுடன் சாய்பாபா காலனியில் உள்ள அந்த வாலிபரின் வீட்டிற்கு சென்றார். 

அங்கு அவர்கள், அந்த வாலிபரை தாக்கி, ஆபாசமாக செல்போனில் வீடியோ எடுத்ததாக தெரிகிறது. 

மேலும் அந்த ஆபாச வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடாமல் இருக்க ரூ.2 லட்சம் பணம் தர வேண்டும் என்று கேட்டு மிரட்டியதாக தெரிகிறது.


இது குறித்த புகாரின் பேரில் சாய்பாபாகாலனி போலீசார் வழக்கு பதிவு செய்து இடையர்பாளையம் டி.வி.எஸ். நகரை சேர்ந்த ஜிதின் என்ற ஜித்து (வயது 25), கே.கே.புதூரை சேர்ந்த பீட்டர் பால்ராஜ் (30) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். 

மேலும் இதில் தொடர்புடைய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்