சாலையோரம் படுத்து தூங்கிய தொழிலாளி தலையில் கல்லை போட்டு கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

தலையில் கல்லை போட்டு தொழிலாளியை கொன்றவர் கைது;

Update:2022-01-18 20:19 IST

கோவை

சாலையோரம் படுத்து தூங்கிய தொழிலாளி தலையில் கல்லை போட்டு கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுதாவது

தொழிலாளி

கோவை சாய்பாபா காலனியில் அண்ணா காய்கறி மார்க்கெட் உள் ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

அதில் சிலர் அங்குள்ள சாலையோரம் படுத்து தூங்குவது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை அங்குள்ள கடை முன்பு தலை நசுங்கிய நிலையில் ரத்த வெள்ளத்தில் ஆண் பிணம் கிடந்தது.

இது குறித்த தகவலின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 

இதில், பிணமாக கிடந்தவர் எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் கூலி தொழி லாளியாக வேலை பார்த்து வந்ததும், 

இவர் கோவை இடிகரையை சேர்ந்த சண்முகம் (வயது 45) என்பதும் தெரியவந்தது.  

அவரது உறவினர்கள் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வசித்து வருவதும், சண்முகத்திற்கு மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகள் சரளமாக பேச தெரியும் என்பதும், 

இதன் காரணமாக அவர் முன்பு சுற்றுலா வழிகாட்டியாக இருந்து வந்ததும் தெரிய வந்தது. 

தலையில் கல்லை போட்டு கொலை

இந்த நிலையில் அவர், இரவில் சாலையோரம் படுத்து தூங்கி கொண்டு இருந்த போது யாராவது மர்ம நபர்கள் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்தது தெரிய வந்தது. 

இதையடுத்து போலீசார் சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


இது குறித்து சாய்பாபா காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 மேலும் தொழிலாளி பிணமாக கிடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில், சண்முகம் மீது ஒருவர் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்யும் காட்சி பதிவாகி இருந்தது. 

கைது

அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில், கவுண்டம் பாளையம் பிரபு  நகரை சேர்ந்த பிரகாஷ் (50) என்பவர்  சண்முகத்தின் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்தது தெரிய வந்தது.

குடிபோதையில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக முன் விரோதம் இருந்ததாகவும், 

இதனால் ஆத்திரத்தில் உடல் முழுவதையும் துணியால் போர்த்தி படுத்திருந்த சண்முகத்தின் காலில் போடுவதாக கருதி தலையில் கல்லை போட்டு விட்டதாக  கூறினார். 

இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்