இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்;
கோவை
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். இதற்கு வி.எஸ்.சுந்தரம் தலைமை தாங்கினார்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.