வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பறவை காவடி எடுத்து வந்த பக்தர்கள்

வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பறவை காவடி எடுத்து வந்த பக்தர்கள்;

Update:2022-01-19 21:30 IST
வால்பாறை, 

வால்பாறையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைத்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா வெகுவிமரிச்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தைப்பூச திருவிழா கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. 

இதையொட்டி சுப்பிரமணிய சுவாமிக்கு கணபதிஹோமம், சிறப்பு அலங்கார பூஜைகள், தீபாராதனைகள் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றன. 
இதனைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுப்பிரமணிய சுவாமிக்கும் வள்ளி-தெய்வானைக்கும் திருகல்யாணம் நேற்று முன்தினம் நடைபெற்றது.  

கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடு காரணமாக  கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள  பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. கோவில் நிர்வாகிகள் மட்டும் திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். 

தைப்பூச திருவிழாவின் இறுதி நாளான நேற்று பக்தர்கள் அலகு குத்தியும், பறவை காவடியும் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இதில் வால்பாறை சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

மேலும் செய்திகள்