சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் கொரோனா பரிசோதனை தீவிரமாக நடைபெற்றது.

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் கொரோனா பரிசோதனை தீவிரமாக நடைபெற்றது.;

Update:2022-01-19 21:32 IST

சுல்தான்பேட்டை,

தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க அரசு இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில் சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணி மற்றும் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் முககவசம் அணியாமல் வெளியே நடமாடுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அபராதம் விதித்தும் வருகின்றனர்.  


சுல்தான்பேட்டையில் கடந்த வாரம் ஒற்றை இலக்கில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது இந்த வாரம் 50-யை கடந்துள்ளது. இதனால் சுகாதாரத்துறையினர் கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் வீடு, வீடாக சென்று கொரோனா பரவல் குறித்தும், தடுப்பூசி போடுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் சளி, காயச்சல் எதேனும் அறிகுறி உள்ளதாக என்று கேட்டறிந்து, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்