கோவை கலெக்டர் அலுவலகத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
கோவை கலெக்டர் அலுவலகத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு;
கோவை,
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தரைத்தளத்தில் கருவூலக மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஏராளமான வர்கள் சென்று வருகிறார்கள். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 5 நாட்கள் தொடர்விடுமுறை விடப்பட்டது.
விடுமுறை முடிந்து கருவூலக மையத்துக்கு ஊழியர்கள் வந்தனர். பின்னர் அவர்கள் கதவை திறந்து உள்ளே சென்றபோது பாதுகாப்பு அறை அருகே பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கோவை தெற்கு தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் அந்த அலுவலகம் முழுவதும் சல்லடை போட்டு தேடினார்கள். ஆனால் அந்த பாம்பு கிடைக்கவில்லை.
அங்கு பாம்புசட்டை மட்டும் கிடைத்தது. ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் அந்த பாம்பு அங்கிருந்து வெளியே சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருந்தபோதிலும் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் அச்சத்துடன் உள்ளனர்.