கோவை மாநகராட்சி ஆணையாளருக்கு கொரோனா

கோவை மாநகராட்சி ஆணையாளருக்கு கொரோனா;

Update:2022-01-19 22:20 IST
கோவை

கோவையில் கொரோனா தொற்று 3-வது அலை வேகமாக உள்ளது. கடந்த மாதம் தினசரி பாதிப்பு 100-க்கும் கீழே இருந்த நிலையில் தற்போது தினமும் பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டி விட்டது. 

தொற்று பரவலை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடிசியா உள்ளிட்ட இடங்களில் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. 

இந்த நிலையில் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கராவுக்கு சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது. அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள வீட்டில் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் லேசான அறிகுறிகள் உள்ளவர்கள் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு வாரம் வீட்டு தனிமையில் இருந்தால் போதுமானது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

மேலும் செய்திகள்