நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்த திமுகவினரிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி நேர்காணல் நடத்தினார்

விருப்பமனு கொடுத்த திமுகவினரிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி நேர்காணல்;

Update:2022-01-20 20:30 IST


கோவை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்த தி.மு.க.வினரிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி நேர்காணல் நடத்தினார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

 இதில், கோவை மாநகராட்சியின் 100 வார்டுகள் மற்றும் 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.

இதனால் அரசியல் கட்சியினர் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். 

இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட பலர் விருப்ப மனு கொடுத்தனர்.

நேர்காணல்

அதைத்தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்த தி.மு.க.வினரிடம் நேர்காணல் செய்யும் நிகழ்ச்சி  கோவை விமான நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

இதற்கு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார். 

அவர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்த தி.மு.க.வினரிடம் நேர்காணல் நடத்தினார். 


நேர்காணலில் தி.மு.க.வினர் சமூக இடைவெளி விட்டு முகக்கவசம் அணிந்து கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்