தனியார் குடோனில் பதுங்கிய சிறுத்தை கூண்டில் சிக்காமல் 4-வது நாளாக போக்கு காட்டி நூலிழையில் தப்பியது கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

தனியார் குடோனில் பதுங்கிய சிறுத்தை கூண்டில் சிக்காமல் 4-வது நாளாக போக்கு காட்டி நூலிழையில் தப்பியது கண்காணிப்பு கேமராவில் பதிவானது.;

Update:2022-01-20 20:56 IST

கோவை

தனியார் குடோனில் பதுங்கிய சிறுத்தை கூண்டில் சிக்காமல் 4-வது நாளாக போக்கு காட்டி நூலிழையில் தப்பியது கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

குடோனில் பதுங்கிய சிறுத்தை

கோவை அருகே மதுக்கரையில் குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தையின் நடமாட்டம் இருந்தது. 

அது அங்கு சுற்றித் திரிந்த நாய்களை கொன்று அட்டகாசம் செய்தது. அந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் 3 இடங்களில் கூண்டு வைத்து இருந்தனர்.

ஆனால் அதில் சிறுத்தை சிக்காமல் வனத்துறையினருக்கு போக்கு காட்டியது. இந்த நிலையில் கோவையை அடுத்த குனியமுத்தூர் பி.கே.புதூரில் உள்ள தனியார் குடோனில் சிறுத்தை பதுங்கியது. 

இது கடந்த 17-ந் தேதி வனத்துறையினருக்கு தெரிய வந்தது. 

தப்பிக்காமல் இருக்க வியூகம்

உடனே 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் குடோனை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் குடோனை சுற்றியும், அதன் மேல் பகுதியிலும் வலையை கட்டினர். 

மேலும் குடோனுக்குள் இருந்து சிறுத்தை எந்தவகையிலும் தப்பிக்காமல் இருக்க வியூகம் அமைத்தனர். 

இதற்காக குடோனின் 2 வாசல்களில் கூண்டு வைத்தனர். அதற்குள் இறைச்சி மற்றும் உயிருள்ள நாய்களை வைத்தனர். 

அவற்றை சாப்பிட சிறுத்தை வர வில்லை. ஆனால் குடோனுக்குள் நடமாடும் சிறுத்தை கூண்டுக்குள் சிக்குமா? என்று கடந்த 3 நாட்களாக கண்காணித்து வந்தனர். 

கண்காணிப்பு

சிறுத்தையின் நடமாட்டத்தை அறிய குடோனுக்குள் 6 நவீன கண்கா ணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. 

அந்த காட்சிகளின் அடிப்படையில் சிறுத்தை கூண்டில் பிடிபடுமா? என்று நேற்று 4-வது நாட்களாக வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். 

இந்த பணி யில் வன உதவி அதிகாரி தினேஷ்குமார், ரேஞ்சர் சந்தியா தலைமை யில் ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

அப் போது அதிகாலை நேரத்தில் சிறுத்தை தான் இருந்த இடத்தை விட்டு நகர்ந்து கூண்டு வைக்கப்பட்டு இருந்த இடத்துக்கு அருகே வந்தது. 

அது, கூண்டிற்குள் 2 அடி எடுத்து வைத்து இறைச்சியின் அருகே சென்றது.

 ஆனால் அந்த சிறுத்தை தொடர்ந்து கூண்டுக்குள் செல்லாததால் நூலிழையில் தப்பியது. குடோனின் ஒரு பகுதிக்கு சென்று பதுங்கி கொண்டது.

உணவாக கோழி, சேவல்

இதனால் சிறுத்தை கூண்டில் சிக்குமா என்ற வனத்துறையினர் காத்திருக்கின்றனர். 

ஆனால் சிறுத்தை கூண்டில் சிக்காமல் வனத் துறையினருக்கு தொடர்ந்து போக்கு காட்டி வருகிறது. 

இதையடுத்து நேற்று கூடுதலாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.

குடோனில் பதுங்கிய சிறுத்தையை பிடிக்க 3 கூண்டுகள் வைக்கப் பட்டு உள்ளன. 

அதில் ஒரு கூண்டில் சிறுத்தை குடிக்க தண்ணீரும், மற்ற கூண்டுகளில் இறைச்சி மற்றும் உயிருடன் நாய்களும் வைக்கப்பட்டு உள்ளன. 

ஆனால் அவற்றின் அருகே சிறுத்தை வர வில்லை. எனவே கூண்டின் அருகே சிறுத்தைக்கு உணவுக்காக ஒரு சேவல் மற்றும் ஒரு கோழி வைக்கப்பட்டு உள்ளது. 

அவற்றின் சத்தம் கேட்டு சிறுத்தை வரும் போது கூண்டுக்குள் சிக்க வாய்ப்பு உள்ளதாக வனத்துறையினர் கருதுகின்றனர்.

மேலும் செய்திகள்