கோவை மாவட்டத்தில் 104 சிறப்பு முகாம்களில் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது

கோவை மாவட்டத்தில் 104 சிறப்பு முகாம்களில் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது;

Update:2022-01-20 20:58 IST

கோவை

கோவை மாவட்டத்தில் 104 சிறப்பு முகாம்களில் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பூஸ்டர் தடுப்பூசி

கோவை மாவட்டத்தில் கொரோனா 3-வது அலை பரவல் தீவிரமாக உள்ளது.

 கடந்த மாதம் வரை 100-க்கு கீழ் இருந்த தினசரி கொரோனா தொற்று தற்போது 3 ஆயிரத்தை தாண்டிவிட்டது. 

எனவே கொரோனா பரவலை தடுக்க மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.

அதன்படி 2 தவணை தடுப்பூசி செலுத்திய முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த 10-ந் தேதி தொடங்கியது. 

இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

104 சிறப்பு முகாம்கள்

இதைத்தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை பூஸ்டர் தடுப் பூசி செலுத்த சிறப்பு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி நேற்று 104 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது. 

அதில், சுகாதார பணியாளர்கள் உள்பட தகுதி வாய்ந்த அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது

கோவை மாவட்டத்தில் நேற்று அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத் திரி மற்றும் சிங்காநல்லூர், உப்பிலிபாளையம் உள்பட பல்வேறு பகுதி களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

2 தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும். 

கோவை மாநகராட்சியில் 32 இடங்கள், புற நகர் பகுதியில் 72 இடங்கள் என 104 இடங்களில் நேற்று காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை சிறப்பு முகாம்கள் நடந்தது. 

மேலும் செய்திகள்