கோவை வனப்பகுதியில் உயிரிழந்த வன விலங்குகளின் கொம்பு உள்பட 274 பொருட்கள் தீ வைத்து எரித்து அழிக்கப்பட்டன
கோவை வனப்பகுதியில் உயிரிழந்த வன விலங்குகளின் கொம்பு உள்பட 274 பொருட்கள் தீ வைத்து எரித்து அழிக்கப்பட்டன;
கோவை
கோவை வனப்பகுதியில் உயிரிழந்த வன விலங்குகளின் பல், நகம், தோல், கொம்பு உள்பட 274 பொருட்கள் தீ வைத்து எரித்து அழிக்கப்பட்டன.
நகம், பல், தோல்
கோவை வனக்கோட்டத்தில் கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன.
அங்கு காட்டுயானை, புலி, சிறுத்தை, மான் உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.
இதில், வனப்பகுதியில் இயற்கை மரணம் மற்றும் நோய்வாய்ப்பட்டு உயிரிழக்கும் வனவிலங்குகளின் பற்கள், தோல், நகங்கள், எலும்புகள், யானையின் துதிக்கைகள் போன்றவை சேகரிக்கப்பட்டு வன அலுவலக கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன.
அவற்றை குறிப்பிட்ட சில ஆண்டுகள் பாதுகாப்பாக வைத்து பின்னர் தீ வைத்து எரித்து அழிப்பது வழக்கம்.
அதுபோல் பல ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வந்த வனவிலங்குகளின் பல், நகம், தோல் உள்ளிட் டவற்றை தீயிட்டு எரித்து அழிக்க சென்னை தலைமை வன உயிரின காப்பாளர் உத்தரவிட்டார்.
தீ வைத்து அழிப்பு
அதன்பேரில் கோவை வன அலுவலகம் முன்பு பெண் யானையின் கோரைப்பற்கள் மற்றும் துதிக்கைகள், புலியின் பற்கள், மான் தோல், கொம்புகள்,
சிறுத்தையின் நகங்கள், பற்கள், எலும்புகள் ஆகியவை கொண்டு வரப்பட்டு எரியூட்ட தயாராக இருந்த மரக்கட்டை மீது அடுக்கி வைக்கப்பட்டன.
பின்னர் அவை மாவட்ட கள இயக்குனர் ராமசுப்ரமணியன் தலை மையில் வன பாதுகாவலர், ஆனைமலை புலிகள் காப்பகம், கோவை மாவட்ட வன அலுவலர் அசோக் குமார் மற்றும்
வன விரிவாக்க அலுவலர், கோவை வனச்சரக அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் முன்னிலையில் நேற்று மதியம் 2.30 மணி அளவில் தீயிட்டு எரித்து அழிக்கப்பட்டது.
274 பொருட்கள்
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், இயற்கை மரணம் மற்றும் நோய்வாய்ப்பட்டு இறந்த பெண் யானையின் 33 கோரைப் பற்கள், 8 துதிக்கைகள்,
207 மான் கொம்புகள், ஒரு தோல், சிறுத்தை யின் 13 நகங்கள், 2 பற்கள், 10 எலும்புகள் என மொத்தம் 274 வன உயிரின பொருட்கள் தீயிட்டு எரித்து அழிக்கப்பட்டன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.