பழைய ரெயில்வே போலீஸ் நிலைய கட்டிடத்தை இடிக்கும் பணி

பழைய ரெயில்வே போலீஸ் நிலைய கட்டிடத்தை இடிக்கும் பணி;

Update:2022-01-21 21:52 IST

கோவை

கோவை ரெயில் நிலையத்தின் முன்புற பகுதியில் ரெயில்வே போலீஸ் நிலையம் இருந்தது. 

அது போதிய இடவசதி இன்றி இருந்தது. எனவே கோவை ரெயில் நிலையத்தின் பின்புற நுழைவு வாசல் பகுதியில் கூடுதல் வசதிகளுடன் ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. 

அங்கு கடந்த 2 ஆண்டுகளாக ரெயில்வே போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. 

இதனால் பழைய ரெயில்வே போலீஸ் நிலைய கட்டிடம் பயன்பாடு  இன்றி கிடந்தது. எனவே அதை இடித்து அகற்ற ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

 அதன்படி, கோவை ரெயில் நிலைய வளாகத்தின் முன்புறம் இருந்த பழைய  ரெயில்வே போலீஸ் நிலைய கட்டிடத்தை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணி நேற்று தொடங்கியது. 

இது குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறும் போது, பழைய ரெயில்வே போலீஸ் நிலைய கட்டிடம் இடிக்கப்பட்ட பிறகு அந்த இடத்தை வாகன நிறுத்துமிடம் அல்லது வேறு புதிய கட்டிடம் கட்டுவதா? என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

மேலும் செய்திகள்