2 பேரை குற்றவாளியாக அறிவிக்க நடவடிக்கை
2 பேரை குற்றவாளியாக அறிவிக்க நடவடிக்கை;
கோவை
கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் சீனியப்பன். வியாபாரி. இவர் ஸ்கூட்டரில் ரூ.35 ஆயிரம் வைத்து பூட்டிவிட்டு அங்குள்ள கோவிலில் சாமி கும்பிட சென்றார்.
அப்போது அவரது ஸ்கூட்டரில் இருந்த ரூ.35 ஆயிரம் பணத்தை திருடி விட்டு 2 பேர் தப்பிக்க முயன்றனர்.
அவர்களை பிடிக்க முயன்ற போது சீனியப்பனை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்றனர். இந்த சம்பவம் கடந்த 26.3.1990-ம் ஆண்டு நடந்தது.
இது குறித்த புகாரின் பேரில் பெரிய கடை வீதி போலீசார், இலங்கை மட்டகளப்பு பகுதியை சேர்ந்த லீமா என்ற மகேந்திரன், ராஜ் என்ற ஆனந்தராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 2 பேரும் கடந்த 1992-ம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்தனர். அதன்பிறகு அவர்கள் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாகினர்.
எனவே அவர்கள் 2 பேரையும் பிடிக்க கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. அதன்பிறகும் அவர்கள் போலீசாரிடம் பிடிபடாமல் உள்ளது.
இந்த வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் அவர்கள் 2 பேரையும் குற்றவாளிகளாக அறிவிக்க பெரியகடை வீதி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.