கோவை ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது

கோவை ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது;

Update:2022-01-22 20:34 IST

கோவை

கோவை ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது.

பொங்கல் பரிசு

பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக அரசு அறிவித்தது. 

இதன்படி கோவை மாவட்டத்தில் 10 லட்சத்து 78 ஆயிரத்து 484 அரிசி ரேஷன் கார்டுதா ரர்களுக்கு பொங்கல் பரிசு வினியோகம் செய்யும் பணி கடந்த 1-ந் தேதி முதல் நடைபெற்று வந்தது. 

பச்சரிசி, கரும்பு, மிளகு, வெல்லம், ரவை, கோதுமை மாவு உள்பட 21 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு இது வரை 92 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது. 

இதன் காரணமாக ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய அரிசி, பாமாயில், கோதுமை, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. 

கூட்டம் அலைமோதியது

தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நிறைவு பெற்று உள்ளது. இதனால் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது.

முழு ஊரடங்கு காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ரேஷன் கடை கள் செயல்படாது.

 இதனால் இந்த மாதம் பொருட்கள் வாங்க ஒருவாரமே உள்ளது. எனவே நேற்று ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க ஏராளமான பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. 

ஏமாற்றம்

அதில் குறிப்பாக கோவை பூமார்க்கெட், ஆர்.எஸ்.புரம், ராமநாதபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. 

அவர்கள், நீண்டவரிசையில் காத்திருந்து பொருட்கள் வாங்கி சென்றனர். இதில் வயதானவர்கள் சாலையோரம் அமர்ந்து இருந்தனர். 

அதிலும் சில ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வரவில்லை என்றும், 2 நாட்கள் கழித்து வந்து பார்த்து பொருட்கள் வாங்கி செல்லுமாறு ஊழியர்கள் தெரிவித்தனர்.

 இதனால் பொருட்கள் வாங்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சில கடைக ளில் பொங்கள் பரிசு தொகுப்பு வாங்காதவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பும், இலவச வேட்டி- சேலையும் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்