குரோம்பேட்டையில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் சாவு
குரோம்பேட்டையில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் பரிதாபமாக இறந்தார்.;
பெயிண்டர்
சென்னை ஜாபர்கான்பேட்டை, வீதியம்மன் கோவில், 2-வது தெருவைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 35). இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.
அருண்குமார், போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஏ.சி. மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். கொரோனா காலத்தில் வேலையின்றி வறுமையில் வாடினார். இதனால் உறவினருடன் சேர்ந்து பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு சென்று வந்தார்.
மாடியில் இருந்து விழுந்து பலி
நேற்று முன்தினம் குரோம்பேட்டை சோழவரம் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் 2-வது தளத்தில் பெயிண்ட் அடிக்கும் வேலையில் அருண்குமார் ஈடுபட்டிருந்தார். அப்போது ஏணி மூலமாக கீழே இறங்கும்போது எதிர்பாராதவிதமாக 2-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில் படுகாயமடைந்த அருண்குமாரை, குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அருண்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து குரோம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.