மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் பலி

மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் உயிரிழந்தார்.;

Update:2022-01-23 17:40 IST
காஞ்சீபுரம் மாவட்டம், பாலூர் காலனியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மகன் அருள்பதி (வயது 30). இவர், சென்னை மண்ணடியில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார்,

இந்தநிலையில் முத்தியால்பேட்டை கச்சாலீஸ்வரர் கோவில் ஜீல்ஸ் தெருவில் சாலையோரம் உள்ள மின்சார பெட்டியில் ஏற்பட்ட பழுதை சரிபார்க்கும் பணியில் அருள்பதி ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட அருள்பதியை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர், ஆனால் செல்லும் வழியிலேயே அருள்பதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்