செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் 1,440 பேருக்கு தாலிக்கு தங்கம், திருமண நிதிஉதவி

செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் 1,440 பேருக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதிஉதவி போன்றவை வழங்கப்பட்டது.;

Update:2022-01-23 18:01 IST
தாலிக்கு தங்கம்

செங்கல்பட்டு மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டமான தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி வழங்கும் விழா காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணைத்தலைவர் எஸ்.ஆராமுதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாய் கிருஷ்ணன், வெங்கட்ராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக காஞ்சீபுரம் தொகுதி எம்.பி. செல்வம், செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் செம்பருத்தி, ஆகியோர் கலந்துகொண்டு 374 பேருக்கு தலா 8 கிராம் தங்கம், மற்றும் திருமண நிதியுதவி போன்றவற்றை வழங்கினார்கள். இதில் தி.மு.க. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக், சமூக நலத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுராந்தகம்

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் 307 பேருக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதிஉதவி வழங்கும் விழா நடந்தது. உத்திரமேரூர் எம்.எல்.ஏ. சுந்தர் காஞ்சீபுரம் எம்.பி.செல்வம், சமூகநல அலுவலர் சங்கீதா, வட்டார சமூக அலுவலர் பிரேமா, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் மற்றும் மதுராந்தகம் ஒன்றிய கழக செயலாளர்கள் சிவகுமார், நகர செயலாளர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படப்பை

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையில் உள்ள குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பாக குன்றத்தூர் ஒன்றியத்தில் திருமண நிதியுதவி வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு தாலிக்கு தங்கம், திருமண நிதி உதவி வழங்கும் விழா குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சரஸ்வதி மனோகரன் தலைமையில் நடைபெற்றது. காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை ஆ. மனோகரன், சமூக நலத்துறை மாவட்ட அலுவலர் சங்கீதா, வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கராஜ், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் உமா மகேஸ்வரி வந்தேமாதரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ. கு.செல்வபெருந்தகை கலந்துகொண்டு 523 பேருக்கு தலா 8 கிராம்் தங்கம் மற்றும் திருமண நிதியுதவி போன்றவற்றை வழங்கினார். இதில் ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன், படப்பை ஊராட்சி மன்ற தலைவர் கர்ணன், மணிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அய்யப்பன், மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் வல்லவன், சமூக நல விரிவாக்க அலுவலர் ரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உத்திரமேரூர்

உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு ஒன்றிய குழு தலைவர் ஹேமலதா ஞானசேகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணைத்தலைவர் வசந்திகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகுமார், மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. க.சுந்தர் கலந்துகொண்டு 236 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

மேலும் ஒரு நபருக்கு சத்துணவு பணிக்கான ஆணையையும், 30 பயனாளிகளுக்கு பிரதமர் வீடுகட்டும் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான ஆணையையும் வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றியசெயலாளர்கள் ஞானசேகரன், குமார், மாவட்ட குழு உறுப்பினர்கள் பத்மாபாபு, சிவகுமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர் நாகன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சோழனூர் ஏழுமலை, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சசிகுமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்