கூடுவாஞ்சேரியில் கிணற்றில் மூழ்கி முதியவர் சாவு

கூடுவாஞ்சேரியில் கிணற்றில் மூழ்கி முதியவர் பரிதாபமாக இறந்தார்.;

Update:2022-01-23 18:18 IST
வீடு திரும்பவில்லை

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி பகுதியில் மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் பால் பெஞ்சமின் (வயது 63).நேற்று முன்தினம் மாலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

சாவு

இந்தநிலையில் நேற்று காலை மகாலட்சுமி நகர் அருகே உள்ள விவசாய கிணற்றில் மூழ்கி பால் பெஞ்சமின் இறந்து கிடந்தார். தகவலறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பால் பெஞ்சமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்