பணம் வைத்து சூதாடிய 15 பேர் கைது

ஆனைமலை, சுல்தான்பேட்டையில் பணம் வைத்து சூதாடிய 15 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2022-01-23 21:45 IST
ஆனைமலை

ஆனைமலை அருகே உள்ள கோட்டூர் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், கோட்டூர் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

சண்முகாபுரம் பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தது. அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதையடுத்து பணம் வைத்து சூதாடியதாக குருசாமி (வயது 49), ரவி (41), தங்கவேல் (50), அன்பு (41), நாகேந்திர குமார் (35), பாலமுருகன் (41), கோபால் (52) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல சுல்தான்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் வதம்பச்சேரிபெரிய வாய்க்கால் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பணம் வைத்து சூதாடிய சுப்பிரமணி, சுரேஷ்குமார், கண்ணன் உதயசூரியன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

 மேலும் பெரிய வதம்பச்சேரியில் பணம் வைத்து சூதாடிய பாலசுப்பிரமணி, சந்திரகுமார், ராமலிங்கம், ஆனந்தகுமார் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்