தூக்குப் போட்டு பெண் தற்கொலை

பொள்ளாச்சி அருகே கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்குப் போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2022-01-24 22:27 IST
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்குப் போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

உணவகம்

பொள்ளாச்சி அருகே உள்ள ராமபட்டிணத்தை சேர்ந்தவர் காளி. இவரது மகள் ரேகா (வயது 29). இவர் தனது உறவினர்களுடன் சேர்ந்து உணவகம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியில் வேலை பார்க்கும் 17 வயது சிறுவன் உணவகத்துக்கு அடிக்கடி வந்து சென்றதாக தெரிகிறது. 

அப்போது ரேகாவிற்கும், அந்த சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து ரேகாவும், அந்த சிறுவனும் தினமும் செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது. மேலும் ஒருவருக்கொருவர் குறுந்தகவல் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரேகா வீட்டில் யாரும் இல்லாத போது சேலையில் கழுத்தில் மாட்டி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவர் தனக்கு சிறுவன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், சாவுக்கு அந்த சிறுவன் காரணம் என எழுதி வைத்தாக தெரிகிறது.

சிறுவன் கைது

இது குறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி தாலுகா போலீசார் ரேகா எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றி, அந்த சிறுவனை பிடித்து விசாரணை நடத்தினார்கள். 

விசாரணையின் போது ரேகா தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்தியதாகவும், அதற்கு மறுத்ததாக அந்த சிறுவன் கூறியதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து பெண்கள் வன்கொடுமை சட்டம், தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். 

இந்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்