பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு
கோவை பள்ளி ஆசிரியர்களுக்கு பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு தொடங்கியது.;
கோவை
கோவை பள்ளி ஆசிரியர்களுக்கு பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு தொடங்கியது.
ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு
தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுநிலை, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு கோவை மாவட்டத்தில் துணி வணிகர் சங்க பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கியது.
இதில் கலந்து கொண்டவர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடை வெளியை கடைபிடித்து பங்கேற்றனர். இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கீதா கூறியதாவது:-
8 பேர் பணிமாறுதல்
மாவட்டத்திற்குள் இடம் மாறும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மட்டும் கலந்தாய்வு நடந்தது. 20 பேர் விண்ணப்பித்திருந்தனர். 2 பேர் வராததால் 18 பேர் கலந்து கொண்டனர்.
இவர்களில் 8 பேரின் விருப்பத்திற்கு ஏற்ப பணிமாறுதல் கிடைத்தது.
இதேபோல் மாவட்டங்களுக்கு வெளியே இடம் மாறிச் செல்லும் தலைமை ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடக்க உள்ளது. அடுத்த மாதம் 23-ந் தேதி வரை இந்த கலந்தாய்வு நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.