கடைகளில் தரமான பொருட்கள் விற்கப்படுகிறதா?- அதிகாரிகள் திடீர் ஆய்வு

காரைக்குடி பகுதியில் கடைகளில் தரமான பொருட்கள் விற்கப்படுகிறதா? என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.

Update: 2022-01-24 18:08 GMT
காரைக்குடி
காரைக்குடி பகுதியில் கடைகளில் தரமான பொருட்கள் விற்கப்படுகிறதா? என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.
அதிகாரிகள் ஆய்வு
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவின்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் பிரபாவதி தலைமையில் காரைக்குடி புதிய பஸ் நிலையம், கல்லூரி சாலை, 100 அடி சாலை ஆகிய பகுதியில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டு அந்த உணவகத்தில் தரமான உணவுகள் விற்பனை செய்யப்படுகிறதா, கெட்டுபோன உணவுகளை இருப்பாக வைக்கப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வில் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துக்குமார், தியாகராஜன், வேல்முருகன், சரவணகுமார், செந்தில் மற்றும் ராஜேஸ்குமார் ஆகியோர் ஈடுபட்டனர். 
அபராதம்
காரைக்குடி பகுதி முழுவதும் மொத்தம் 63 கடைகள் மற்றும் சாலையோர கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு 13 கிலோ பிளாஸ்டிக் பைகள், கெட்டுபோன நிலையில் உள்ள 7 லிட்டர் குளிர்பானங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 
மேலும் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்