புதுச்சேரியில் புதிதாக 1,130 பேருக்கு தொற்று பாதிப்பு

புதுவையில் புதிதாக 1,130 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மேலும் 2 முதியவர்கள் பலியாகி உள்ளனர்.

Update: 2022-01-24 19:03 GMT
புதுச்சேரி, ஜன.25-
புதுவையில் புதிதாக 1,130 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மேலும் 2 முதியவர்கள் பலியாகி உள்ளனர்.
1,130 பேருக்கு பாதிப்பு
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 585 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 1,130 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
தற்போது ஆஸ்பத்திரிகளில் 185 பேர், வீடுகளில் 15 ஆயிரத்து 467 பேர் என 15 ஆயிரத்து 652 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 1,172 பேர் குணமடைந்தனர். இது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை விட அதிகமாகும்.
2 முதியவர்கள் பலி
அதே நேரத்தில் லாஸ்பேட்டையைச் சேர்ந்த 86 வயது முதியவர், காராமணிகுப்பத்தை சேர்ந்த 61 வயது முதியவர்  ஆகியோர்  சிகிச்சை பலனின்றி         பலியானார் கள். இதனால் தொற்று  பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,908 ஆக உயர்ந்துள்ளது. புதுவையில் தொற்று பரவல் 43.71 சதவீதமாகவும், குணமடைவது 88.55 சதவீதமாகவும் உள்ளது. முதல் தவணை தடுப்பூசியை 234 பேரும் 2-வது தவணை தடுப்பூசியை 407 பேரும் பூஸ்டர் தடுப்பூசியை 74 பேரும்  நேற்று முன்தினம் செலுத்தி கொண்டனர். 
இதுவரை 15 லட்சத்து 22 ஆயிரத்து 3 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
___

மேலும் செய்திகள்