கண்மாயில் மூழ்கி சிறுமி, மூதாட்டி பலி

மேலூர் அருகே கண்மாயில் மூழ்கி சிறுமி, மூதாட்டி பலியானார்கள்.;

Update:2022-01-25 01:11 IST
மேலூர், 

மேலூர் அருகே கண்மாயில் மூழ்கி சிறுமி, மூதாட்டி பலியானார்கள்.

குளிக்க சென்றனர்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே மேலவளவு போலீஸ் சரகத்தில் சேக்கிபட்டி உள்ளது. இந்த ஊரைச் சேர்ந்த பெண்கள் சிலர் அங்குள்ள மூக்காம்பிள்ளை கண்மாயில் நேற்று மாலை குளித்து கொண்டிருந்தனர்.
அப்போது மணிகண்டன் என்பவரின் மகள் கனிஷ்கா (வயது 7) கண்மாய் தண்ணீரில் எதிர்பாராதவிதமாக மூழ்கினார். அதனை பார்த்த மூதாட்டி சின்னப்பொண்ணு (65) என்பவர் அந்த சிறுமியை காப்பாற்ற முயன்றார். அப்போது மூச்சு திணறல் ஏற்பட்டு அவரும் தண்ணீரில் மூழ்கினார்.

2 பேர் பலி

சிறுமியும், மூதாட்டியும் கண்மாயில் மூழ்கியதை அறிந்த அங்கு குளித்து கொண்டிருந்தவர்கள் அலறினார்கள். பின்னர் தகவல் அறிந்து ஊர் ெபாதுமக்கள் கண்மாய்க்கு விரைந்து வந்தனர். அவர்கள் கண்மாய்க்குள் இறங்கி நீண்டநேரமாக நீரில் மூழ்கியவர்களை தேடினார்கள். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு 2 பேரின் உடல்களையும் வெளியே எடுத்தனர். நீரில் மூழ்கியதில் 2 பேரும் உயிரிழந்து விட்டனர். 
இது பற்றி அறிந்ததும் சிறுமி, மூதாட்டியின் உறவினர்கள் அவர்களது பிணத்தை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் மேலவளவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிேசாதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
கண்மாய்க்கு குளிக்க சென்ற இடத்தில் சிறுமியும், மூதாட்டியும் பலியான சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.

மேலும் செய்திகள்