குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

மேட்டூரில் குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-01-24 19:56 GMT
மேட்டூர்:-
மேட்டூரில் குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடிநீர்
மேட்டூர் நகராட்சிக்குட்பட்ட தங்கமாபுரிபட்டினம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தங்கமாபுரிபட்டினம் பகுதிக்கு சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை என்று கூறப்படுகிறது. 
இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக சிரமப்பட்டு வந்தனர். மேலும் நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் குடிநீர் சீராக வினியோகிக்கப்படவில்லை என்று தெரிகிறது.
சாலை மறியல்
இந்த நிலையில் நேற்று மேட்டூர்-சேலம் நெடுஞ்சாலையில் தங்கமாபுரிபட்டினம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், குடிநீர் வழங்க கோரி திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து மேட்டூர் போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார், நகராட்சி ஆணையாளர் அண்ணாமலை, கருமலைக்கூடல் மற்றும் மேட்டூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் காலை 10 மணி முதல் 10.35 மணி வரை ேபாக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உதவி கலெக்டர்
இதைத்தொடர்ந்து மேட்டூர் உதவி கலெக்டர் பிரதாப் சிங், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை தனது அலுவலகத்துக்கு நேரில் அழைத்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் சீராக குடிநீர் வினியோகம் செய்ய வழிவகை செய்வதாக பொதுமக்களிடம் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்