புதிதாக 1,089 பேருக்கு கொரோனா தொற்று

சேலம் மாவட்டத்தில் புதிதாக 1,089 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம், நோய் தொற்றுக்கு முதியவர் ஒருவர் பலியாகி உள்ளார்.

Update: 2022-01-24 19:56 GMT
சேலம்:-
சேலம் மாவட்டத்தில் புதிதாக 1,089 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம், நோய் தொற்றுக்கு முதியவர் ஒருவர் பலியாகி உள்ளார்.
1,089 பேருக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 1,074 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில் நேற்று புதிதாக 1,089 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி பகுதியில் 519 பேர், ஓமலூரில் 75 பேர், தாரமங்கலத்தில் 36 பேர், வீரபாண்டியில் 52 பேர், எடப்பாடியில் 19 பேர், பனமரத்துப்பட்டி மற்றும் அயோத்தியாப்பட்டணத்தில் தலா 30 பேர், தலைவாசலில் 31 பேர், காடையாம்பட்டி மற்றும் கொங்கணாபுரத்தில் தலா 24 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் 1,089 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 978 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், நோய் தொற்றுக்கு ஆளான 813 பேர் குணமடைந்துவிட்டதால் நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
முதியவர் பலி
சேலம் மாவட்டத்தை சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,735 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு 5 ஆயிரத்து 890 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்