டவுன் பஸ்களில் பயணிகள் கூட்டம்

டவுன் பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.;

Update:2022-01-25 03:39 IST
ஈரோடு
பொங்கல் விடுமுறை முடிந்து பல்வேறு தொழிற்சாலைகள், அலுவலகங்கள் திறக்கப்பட்டு உள்ளன. ஏராளமானோர் வேலைக்கு சென்று வருவதால் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் டவுன் பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் சமூக இடைவெளியை மறந்து பயணிகள் கூட்டமாக நின்று பஸ்களில் பயணம் செய்கின்றனர். இது மேலும் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும் பகுதியில் கூடுதல் டவுன் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்