கோவூர் ஊராட்சியில் கலைஞர் வீட்டு வசதி திட்ட மறு கணக்கெடுப்பு

கோவூர் ஊராட்சியில் கலைஞர் வீட்டு வசதி திட்ட மறு கணக்கெடுப்பை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

Update: 2022-01-25 12:51 GMT
கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் கலைஞர் வீட்டு வசதி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் வீடுகள் இல்லாதவர்கள், குடிசைகளில் வசிப்பவர்கள் அதனை தளம் போட்ட வீடாக கட்டி கொள்ள தமிழக அரசின் சார்பில் வழங்கும் நிதியின் கீழ் வீடுகள் கட்டிக்கொள்ள தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிலையில் குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சியில் கடந்த 2010-ம் ஆண்டு 80 வீடுகள் கட்டுவதற்கான அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் தற்போது எவ்வளவு வீடுகள் கட்டப்பட்டுள்ளது. மேலும் எவ்வளவு வீடுகள் கட்டாமல் பாதியிலேயே பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளது என்பது குறித்த கணக்கெடுப்பு பணியை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி நேற்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு கட்டி முடிக்கப்பட்ட வீடுகளையும், கட்டி முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ள வீடுகளையும் அவர் மறு கணக்கெடுப்பு நடத்தி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அவருடன் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்